top of page

உலக மொழிகள் எல்லாவற்றிலும் படம் தயாரிக்க விரும்பும் ஜான் சுதிர் !

  • Writer: Linda Miner
    Linda Miner
  • May 15, 2017
  • 2 min read

இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப் படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்தி வரும் ஜான்சுதிர் நட்பு ரீதியாக பல படங்கள் வளர்வதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.

2013ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த் நடிக்க “ ஏமோ குர்ரம் எகரா வச்சு “ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்ததின் மூலம் தயாரிப்பாளராக நேரடியாக களத்தில் இறங்கினார். அதற்கு பிறகு ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி விக்கி டோனர் என்ற ஹிந்தி படத்தை தெலுங்கில் சுமந்தை வைத்து ரீமேக் செய்தார்.

படைப்புலகில் சிறந்த கலைஞர்களைக் கொண்டிருக்கும் தமிழ் திரையுலகின் மீது அதிக ஆர்வம் உண்டு என்பதால் தமிழ்ப் படங்களை தயாரிக்க முடிவு செய்தார். அதன் படி ரவிபார்கவன் இயக்கத்தில் பரத் நடிக்க “ கடைசிபெஞ்ச் கார்த்தி “ என்ற பெயரில் தமிழிலும் “ மல்லி பிரேமிஸ்தே “ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறார். தெலுங்கில் பரத் நேரடியாக கால் பதிக்கும் படம் இது.

உலகம் முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி இயக்கத்தில், மரகதமணி இசையில் “ ஷோ டைம் “ என்ற பெயரில் தெலுங்கிலும், “ காட்சி நேரம் “ என்ற பெயரில் தமிழிலும் தயாரித்து வருகிறார்.

அடுத்ததாக மஞ்சு விஷ்ணு நடிக்க, கார்த்திக் இயக்கத்தில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் தமிழ் , தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதன் துவக்க விழா விரைவில் நடைபெற உள்ளது.

இதை தவிர தென்னகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற “ காஞ்சனா 2 “ படத்தின் கொரியா, சைனா, தாய்லாந்த், ஜப்பான் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி இருக்கிறார். ஒரு தென்னிந்திய படத்தை உலக அளவில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கும் முதல் தயாரிப்பாளர் இவர்தான்.

உலக நாடுகளில் உள்ள அனைத்து மொழிகளிலும் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஜான்சுதிர். இந்திய கலைஞர்களைக் கொண்டு வெளி நாடுகளிலும், வெளிநாடுகளில் உள்ள கலைஞர்களை இந்தியாவிலும் பயன் படுத்தி படங்களைத் தயாரிக்க உள்ளார். ஜாக்கிஜான், டோனிஜா ஆகியோருக்கு ஜான்சுதிர் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

RAMA Reels is a major movie producer in Tollywood of both Telugu and Tamil movies. RAMA Reels and associated banners have been involved in over 50 productions in India. With this foundation of success, RAMA is now reaching out to the rest of Asia with a vision to unite Asia under a singular Entertainment umbrella. RAMA Reels is a division of RAMA Group run by Chairman John Sudheer Pudhota

 
 
 

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© Copyright RAMA Group 2017

8-2-293//82/7/712/A Plot No. 712, NBK Building, 3rd Floor, Road No. 36 Jubilee Hills, HYDERABAD-500 033 T.S

RAMA World: ramareels@hotmail.com

  • Facebook Social Icon
  • Twitter Social Icon
  • Instagram Social Icon
bottom of page